Published : 15,Oct 2022 10:56 AM

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

College-student-sexually-assaulted

அரியலூரில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி (17) ஒருவர், ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடன் படிக்கும் மாணவியின் தந்தை இறப்புக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற மாணவியை காணவில்லை என அவரது பெற்றோருக்கு ஹாஸ்டலில் இருந்து போன் செய்துள்ளனர்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தேடிப் பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது திருச்சி மாவட்டம் முதுவத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவி இருப்பது தெரியவந்தது. அதேபோல் சிறுவன் ஒருவர், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

image

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவரும் ஆறாம் வகுப்பு படித்ததில் இருந்து காதலித்து வந்ததும். ஏற்கனவே ஒருமுறை ஓடிப்போனதும், மாணவியை விட 6 மாதம் சிறியவன் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறார் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்