[X] Close

நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள்: தண்ணீர் பெருகாததால் மக்கள் கவலை!

Occupies-in-waterway--People-do-not-care-because-water-does-not-grow-

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளதால், மழை பெய்தும் குளங்களில் தண்ணீர் பெருகவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement

கோவை மாவட்டத்தில் பரவ‌லாக மழை பெய்தும் பெரும்பாலான குளங்கள் நிரம்பவில்லை. நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே இதற்கு காணரம் என்று குற்றம்சாட்டுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். கட்டடக் கழிவுகளையும், குப்பைகளையும், வாய்க்கால்களில் சிலர் கொட்டிவிட்டுச் செல்வதால், நீர்வரத்து தடைபட்டு ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் கூறுகின்றனர்.

சிங்காநல்லூரை ஒட்டி உள்ள வெள்ளலூர் குளத்தின் நீர்வழிப்பாதையான ராஜவாய்க்கால், தற்போது தான் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் ‌‌மாநகரின் பிற பகுதிகளிலும் நீர்வழிபாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை மறித்து அரசு அதிகாரிகளே சில திட்டங்களை செயல்படுத்துவதாகவும், இனி வரும் காலங்களில் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Advertisement

மாநகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மீட்டு குளங்களில் தண்ணீர் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Advertisement

Advertisement
[X] Close