
கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,479 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 78 புள்ளி 48 அடியாகவும், நீர் இருப்பு 40 புள்ளி 45 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.