Published : 13,Oct 2022 07:29 AM

டி20 உலகக் கோப்பை: ஸ்டிரைக் பவுலர்கள் பட்டியலை வெளியிட்ட ஐசிசி..இந்திய அணியில் யார், யார்?

ICC-names-2-strike-bowlers-for-every-team-at-T20-World-Cup-2022

இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் இரு ஸ்டிரைக் பவுலர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது ஐசிசி.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் இருந்து 2 ஸ்ட்ரைக் பவுலர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது ஐசிசி.

பந்துவீச்சாளரின் தரவரிசை மற்றும் அவரின் சமீபத்திய ஃபார்ம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், இந்திய அணியின் ஸ்டிரைக் பந்துவீச்சாளர்களாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரும் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

இந்திய அணி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

இதையும் படிக்கலாம்: உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள்.. டாப் 5ல் 4 இந்திய வீரர்கள்.. முதலிடம் யார் தெரியுமா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்