முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 25 நாட்களுக்குப் பிறகு தற்போது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்த அதிகரித்து வருவதால் 16 கண் மதகுபாலம் வழியாக மழைக்கால வெள்ள நீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்பதால் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலமாக காவிரி கரையோர பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com