பேருந்தில் செல்லும் வழியில் திடீர் மாரடைப்பு - இருக்கையிலேயே உயிரைவிட்ட 30 வயது இளைஞர்!

பேருந்தில் செல்லும் வழியில் திடீர் மாரடைப்பு - இருக்கையிலேயே உயிரைவிட்ட 30 வயது இளைஞர்!
பேருந்தில் செல்லும் வழியில் திடீர் மாரடைப்பு - இருக்கையிலேயே உயிரைவிட்ட 30 வயது இளைஞர்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணமடைந்தார்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு சொகு சுபேருந்து சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்தபோது, சிவகாசி வெற்றிலை ஊரணி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(30) என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் அருகே அமர்ந்து வந்த அவரது சகோதரர் எழுப்பியபோது எழுந்திருக்காததால் உடனடியாக பேருந்தை நிறுத்தி இறக்கி உள்ளனர். ஆனால் அதற்குமுன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

 இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். தீபாவளி நெருங்குவதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்றபோது மாரடைப்பால் வழியிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் உயிர் இழந்த செந்தில்குமாரின் உடலை மீட்ட மேல்மருவத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பத்ராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com