Published : 11,Oct 2022 09:25 AM
இந்தியாவில் பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

`நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர், இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்க கூடியதுதான். ஆனால் இதனை தேசிய குழந்தைகள் நல ஆணையத்திடம் சென்று முறையிடுங்கள் எனக் கூறினர்.
அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வசதிகள் உருவாக்கி தரப்படும் என்றும், மனுதாரருக்கு அதில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.