'நாங்கள் பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம்; அதேபோல தான் அவர்களும்' - அஷ்வின் பக்குவம்

'நாங்கள் பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம்; அதேபோல தான் அவர்களும்' - அஷ்வின் பக்குவம்
'நாங்கள் பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம்; அதேபோல தான் அவர்களும்' - அஷ்வின் பக்குவம்

"நீங்கள் அதைச் சொல்லும் வரை, அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்பது எனக்குத் தெரியாது'' என ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் அஷ்வின்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஓராண்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா, கடந்த சில போட்டிகளின் முடிவுகளுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானை மதிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறினார். இந்நிலையில் ரமீஸ் ராஜாவின் இந்தக் கருத்து குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நீங்கள் அதைச் சொல்லும் வரை, அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்பது எனக்குத் தெரியாது'' என்றார்.

மேலும் அவர், “பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடுவதில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை குறித்து சொல்ல வேண்டாம். அது இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பகுதி. டி20 ஃபார்மெட்டில் வெற்றி தோல்விக்கான முடிவு நூலிழையில் இருக்கும். நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அதேபோல தான் அவர்களும்'' என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிய சர்ச்சை: பவுலரை கேட்ச் பிடிக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட் - வைரலாகும் வீடியோ

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com