[X] Close

அரசியல் பதிவல்ல: அஸ்வின் விளக்கம்

ashwin-explais-about-his-tweet

தமிழக அரசியல் குறித்து தாம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு விரைவில், 234 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு விளக்கம் அளித்த அஸ்வின், தாம் அரசியல் தொடர்பாக அதனை தெரிவிக்கவில்லை என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு குறித்தே, தாம் கருத்து கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close