Published : 10,Oct 2022 01:54 PM

'நான் எனக்காக விளையாட மாட்டேன்' - சதத்தை தவறவிட்ட இஷான் கிஷன் பேச்சு

India-vs-South-Africa-Ishan-Kishan-Fiery-Response-On-Criticism-Over-Strike-Rotation

''சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது என்றாலும், அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி'' எனத் தெரிவித்துள்ளார் இஷான் கிஷன்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் அடுத்து இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினார்கள். இஷான் கிஷான் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சதத்திற்கு அருகில் நெருங்கிய போது எதிர்பாராதவிதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

image

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய இஷான் கிஷன், ‘‘தொடரை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அணிக்காக பங்களிப்பை கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இது எனது சொந்த மைதானம். பலரும் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பீல்டிங் செய்யும் பொழுது என்னிடம், 'இன்று நீ சதம் அடிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்கள். அதற்காகத்தான் நான் நிதானத்துடன் விளையாடினேன். துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன்.

image

சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்: புதிய சர்ச்சை: பவுலரை கேட்ச் பிடிக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட் - வைரலாகும் வீடியோ

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்