தீபாவளி பண்டிகையொட்டி வெடி பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை.! ரயில்வே போலீசார் சோதனை.!

தீபாவளி பண்டிகையொட்டி வெடி பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை.! ரயில்வே போலீசார் சோதனை.!
தீபாவளி பண்டிகையொட்டி வெடி பொருட்களை ரயிலில் எடுத்து செல்ல தடை.! ரயில்வே போலீசார் சோதனை.!

தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடி பொருள்களை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை தவிர்க்க வலியுறுத்தியும் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்பு பாதை காவல் துறையினர் பயணிகளின் உடமையை சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கும் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டத்திற்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு பாக்ஸை பயணிகள் ரயிலில் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், துண்டு பிரசுரங்களை கொடுத்தும் சோதனை நடத்தியும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் பயணிகளின் உடைமைகளை நடைமேடை மற்றும் வைகை அதிரவு வண்டியின் ரயில் பெட்டிகளிலும் வைத்து சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் ஆய்வில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் இருதரப்பினரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com