Published : 10,Oct 2022 12:48 PM
சென்னையில் நடந்த ராணுவ பணித்தேர்வு : 'ப்ளூடூத்' மூலம் காப்பி அடித்ததாக 28 பேர் கைது.!

சென்னையில் நடைபெற்ற ராணுவத் தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பி அடித்ததாக ஹரியானாவைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பள்ளியில் ராணுவ பணிக்கான குரூப் சி தேர்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வின் போது சிலர் மீது தேர்வு மேற்பார்வையாளருக்கு சந்தேகம் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரனையில், ப்ளூடூத் மூலம் காப்பி அடித்த ஹரியானாவை சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் வழக்குப்பதிவு உறுதி செய்யப்பட்டதால் 28 பேரும் மீண்டும் ராணுவ பணிக்கு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.