Published : 10,Oct 2022 11:48 AM

ராஜஸ்தான்: மூதாட்டியின் கால்களை வெட்டி கொலுசுகளை திருடிய கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெள்ளிக் கொலுசுகளை திருடுவதற்காக மூதாட்டியின் கால்களை வெட்டிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

100 வயதை கடந்த மூதாட்டி ஒருவரின் கால்கள் துண்டிக்கப்பட்டு நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் கால்களை வெட்டி அவர் அணிந்திருந்த கொலுசுகளை திருடியது தெரியவந்தது.

image

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்