கால்பந்து கிளப் அணிகளுக்காக ரொனால்டோ நிகழ்த்திய அடுத்த சாதனை!

கால்பந்து கிளப் அணிகளுக்காக ரொனால்டோ நிகழ்த்திய அடுத்த சாதனை!
கால்பந்து கிளப் அணிகளுக்காக ரொனால்டோ நிகழ்த்திய அடுத்த சாதனை!

கால்பந்து கிளப் அணிகளுக்காக 700 கோல்களை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் துவங்கும்போது கால்பந்து கிளப் அணிகளுக்காக மட்டும் 698 கோல்களை அடித்து இருந்தார். இதனால் 700 கோல்களை அடிக்க 2 கோல் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்த சீசன் துவங்கியது. தொடங்கிய நாள் முதல் ரொனால்டோ கோல் அடிக்க தடுமாறி வந்த நிலையில், எவர்டன் அணிக்கு எதிராக நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் 44வது நிமிடத்தில் தன்னுடைய 700வது கோல் அடித்து சாதனை படைத்துள்ளார் அவர்.

இதுவரை தன்னுடைய சொந்த நாடான போர்ச்சுகல் மற்றும் கால்பந்து அணிகளுக்கு என மொத்தமாக 1129 போட்டிகளில் விளையாடி உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 817 கோல்களை அடித்து கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 989 போட்டிகளில் விளையாடி உள்ள மெஸ்ஸி 781 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com