Published : 21,Sep 2017 05:29 AM

வெளிப்புறத்தில் இதயம் உள்ள 7 வயது சிறுமி

Meet-the-little-girl-whose-heart-pushes-out-of-her-chest

ரஷ்யாவைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் இதயம் அவரது மார்புப் பகுதியின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கிறது. 

விர்சாவியா என்ற அந்தச் சிறுமியின் இதயம் முழுமையாக வெளிப்புறத்தில் இருப்பதோடு, அவரது சருமம் மட்டுமே போர்வையாக மூடப்பட்டு உள்ளது. பத்து லட்சம் பேரில் ஒருவருக்கும் குறைவாகவே இதுபோன்று வெளிப்புரத்தில் இதயம் அமையும் என்றும் அதை தொராக்கோ அப்டாமினல் சிண்ட்ரம் என்று கூறப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

நடனம், ஓவியம் உள்ளிட்டவற்றில் ஆர்வமுள்ள விர்சாவியாவுக்கு சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் அமெரிக்கா வந்திருக்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய வலிமை விர்சாவியா‌விடம் இல்லை என்றும் அவரின் ரத்த அழுத்தம் சரியாக இல்லை என்பதால் அறுவை சிகிச்சைக்கு மருத்துவரகள் பரிந்துரைக்கவில்லை. எனவே, நடனத்தில் ஈடுபாடுள்ள விர்சாவியாவை ஹாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றால் அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் சரியாகும் என்ற நம்பிக்கையில் தற்போது அவரது குடும்பம் அங்கு இடம்பெயர்ந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்