Published : 09,Oct 2022 02:06 PM
சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது திடீர் மண் சரிவு... பணியிலிருந்தோர் உயிரிழப்பு

உதகை அருகே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணி நடந்தபோது மண் சரிந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பணியில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தடுப்பு சுவர் அமைக்க மண்னை தோண்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் சேட் மற்றும் வேலு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதானைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.