கன்னியாகுமரி: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் மருந்தாளுநர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் மருந்தாளுநர் எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் மருந்தாளுநர் எடுத்த விபரீத முடிவு

குளச்சல் அருகே தனியார் மருத்துவமனையின் பெண் மருந்தாளுனர் 4- பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் சஜிலா - ஆனந்த குமார் தம்பதியர். இவர்களுக்கு 7-வயதில் ஆண் குழந்தையும் 3-வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சஜிலா நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த சஜிலா குழந்தைகளுக்கு உணவளித்து விட்டு சமயலறை ஸ்டோர் ரூமில் சென்று கதவை பூட்டியுள்ளார். இதையடுத்து இரவு வீட்டிற்கு வந்த கணவர் ஆனந்த குமார் அழைத்தும் வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளார்.

அப்போது சஜிலா தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் எழுதி வைத்திருந்த 4-பக்க கடிதத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 என்ற எண்ணுக்கோ, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com