Published : 09,Oct 2022 10:46 AM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 2-வது ஒருநாள் போட்டி - வெற்றி நெருக்கடியில் இந்தியா

India-vs-South-Africa-2nd-ODI-Predicted-XI-Both-teams-to-stick-to-the-same-lineup-in-Ranchi

இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் இந்திய அணி தொடரை சமநிலைக்கு கொண்டு வர முடியும்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும். அதனால் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் வென்று பதிலடி தந்தால்தான் இந்தியா தொடரை சமநிலைக்கு கொண்டு வர முடியும்.

image

முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக செயல்பட தவறியது. ஷிகர் தவண், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கலாம். ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். காயம் காரணமாக தீபக் சாஹர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவை தரக்கூடும். பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக அறிமுக வீரர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படக் கூடும்.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தமட்டில் முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்ற  அணியே 2வது ஆட்டத்திலும் இன்று களம் காணும் வாய்ப்பு உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற  தீவிரம் காட்டும். அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி மல்லுக்கட்டும்.

image

ஆடும் லெவன் கணிப்பு இதுதான்.!

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்கா: ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், லுங்கி என்கிடி, வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.

இதையும் படிக்க: 'அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம்' - தோனியை நினைவுக் கூர்ந்த ஷர்துல் தாகூர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்