[X] Close

டெல்லி காற்று மாசால் தினமும் 8 பேர் உயிரிழப்பு

air-pollution-kills-8-person-per-day-in-delhi

டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் தினம்தோறும் சராசரியாக 8 பேர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

டெல்லியில் கந்தக புகையை வெளியிடும் வாகனங்களால் காற்று மாசு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த காற்று மாசு தொடர்பான நோய்களால் தினம்தோறும் சராசரியாக 8 பேர் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கை அடிப்படையில் இந்த தகவலை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், கந்தக புகையை வெளியிடும் வாகனங்களை கட்டுப்படுத்துவது குறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி 4 வாரத்தில் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close