[X] Close

தனிக்கட்சியா? ஆம் ஆத்மியா?: கமல்ஹாசனை இன்று சந்திக்கிறார் கெஜ்ரிவால்

Arvind-Kejriwal-meets-Kamal-Hassan

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை இன்று சந்திக்கிறார்.

டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வரும் கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்தித்து பேசுகிறார். சமீப காலமாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கெஜ்ரிவாலுடன் கமல்ஹாசன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளாரா? அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா? என்பன உள்ளிட்ட யூகங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக கமல் ஒரு ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், அப்படி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் கூறினார். மேலும், தான் மாற்றத்தை முன்னெடுத்து செல்ல விரும்புவதாகவும், இது தன் வாழ்நாளில் நிறைவேறாமல் போனாலும் தனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள் என்றும் கூறியிருந்தார். இது தனது விருப்பத்தின் படி நடக்கப்போவதில்லை, கட்டாயத்தின்பேரில் நடக்க இருக்கிறது என்றும் கமல் தெரிவித்திருந்தார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close