Published : 08,Oct 2022 05:09 PM

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பைக்குள் அடைத்து காட்டில் வீசிய கொடூரம்

Assam-Man-Allegedly-Raped-Minor-Stuffed-Her-In-Bag-She-Walked-Back-Home

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கழுத்தை அறுத்து, ஒரு பைக்குள் திணித்து காட்டுப்பகுதியில் வீசிச் சென்றுள்ளார் குற்றவாளி.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி சஞ்சய் டெலி (26). இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான  சிறுமி ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அன்று நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்திற்காக அந்த சிறுமி வேறொரு ஆண் நபருடன் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் டெலி, அந்த சிறுமியை ஆள் அரவமற்ற பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு நில்லாமல்  சிறுமியின் கழுத்தை அறுத்து, ஒரு பைக்குள் திணித்து காட்டுப்பகுதியில் வீசிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பையை திறந்து வெளியே தப்பித்து வந்த அந்த சிறுமி படுகாயங்களுடனும் உடைகள் கிழிந்த நிலையிலும் வீடு திரும்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை உடனடியாக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

image

தற்போது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சஞ்சய் டெலியை போலீசார் கைது செய்தனர். கழுத்தில் ஏற்பட்டுள்ள வெட்டுக்காயம் காரணமாக சிறுமியால் பேச முடியவில்லை. எனவே அந்த சிறமி காகிதத்தில் தனக்கு நடந்ததை சுருக்கமாக எழுதிக் கொடுத்தார். சிறுமி குணமடைந்தவுடன் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: "குழந்தையின் மீது சத்தியம் செய்யட்டும்" -பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்