மது பழக்கத்திற்கு அடிமையான காவலர்.. அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய உதவி ஆணையர்

மது பழக்கத்திற்கு அடிமையான காவலர்.. அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய உதவி ஆணையர்
மது பழக்கத்திற்கு அடிமையான காவலர்.. அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய உதவி ஆணையர்

மது பழக்கத்திற்கு ஆளான காவலருக்கு அறிவுரைகூறி நல்வழி படுத்தும் ஆயுதப்படை உதவி ஆணையரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆயுதப்படை உதவி கமிஷனர் கண்ணபிரான், மது பழக்கத்திற்கு உள்ளன காவலர் ஒருவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை அழைத்து அறிவுரை கூறிய அவர், குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை ஏற்று அந்த காவலர் மனம் திருந்தி விரதமிருந்து மாலை அணிவித்துக் கொள்ள விரும்பி அதனை ஆயுத படை உதவி ஆணையர் கண்ணபிரான் கைகளால் அணிந்து கொண்டுள்ளார். மேலும் 'இனி குடிக்க மாட்டேன்' என அவரிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் இப்போதுதான் அழகா இருக்கீங்க அப்பா, என அந்த காவலரின் ஆறு வயது மகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com