Published : 20,Sep 2017 05:02 PM

நாளை 2-வது ஒருநாள் போட்டி: வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி

India-vs-Australia-2nd-ODI-at-Kolkata

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேவேளையில் பேட்டிங்‌ மற்றும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்