Published : 06,Oct 2022 12:51 PM

மழை வெள்ளத்திற்கு719 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

719-motor-pumps-have-been-kept-ready-to-drain-the-stagnant-rain-water-in-the-areas-under-Chennai-Corporation-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக 719 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணியில் இணைப்பு இல்லாத இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 1,033 கி.மீ தொலைவிற்கு ரூபாய் 4,070 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் என 400க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் பணிகள் முழுமையாக இல்லாமல் இணைப்பு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது, அந்த இணைப்பு பகுதிகளை மையப்படுத்தி மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

image

அந்த வகையில் 719 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு குதிரை திறனிலிருந்து நூறு குதிரைத்துடன் வரை இருக்கக்கூடிய மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு மின்மோட்டோர்களும் அதிநவீனம் வாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேங்கிய மழை நீரை நிமிடம் ஒன்றுக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியிட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்