[X] Close

அரசு மருத்துவமனை ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

pudukkottai-government-hospital

அரசு மருத்துவமனை ஒப்பந்ததாரர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொற்குடையார்கோவில் சாலையில் வசிக்கும் நித்யானந்தம் டிரஸ்ட் நடத்தி வருவதுடன் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மெத்தை விரிப்பு உள்ளிட்டவைகளை வழங்கும் ஒப்பந்ததாரதாக உள்ளார். அந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது. வாங்கப்பட்ட பொருட்களில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நித்யானந்தம் வீட்டிற்கு வந்து, வீட்டிலுள்ள ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close