Published : 05,Oct 2022 08:54 AM

பெரம்பலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக 23 பேரிடம் 1 கோடியே 83 லட்சம் மோசடி

பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 23 நபர்களிடம் 1 கோடியே 83 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (40) என்பவர் பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்த மோகன்பாபு (25) என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் பெற்றுள்ளார். அதேபோல் அவரது மனைவிக்கு விஏஓ வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் பெற்றுள்ளார்.

image

இதேபோல் மொத்தம் 23 நபர்களிடம் 1 கோடியே 83 லட்சம் ரூபாயை பெற்ற பிரகாஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், பிரகாஷ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்