Published : 04,Oct 2022 09:38 PM

அக். 21ம் தேதி ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்! விஜய்யின் வாரிசு எப்போது தெரியுமா?

Sivakarthikeyan-s-Prince-releases-on-Oct---21st--Do-you-know-when-Vijay-s-Varisu-

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

Prince (2022) - IMDb

தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தீபாவளியன்று அக்டோபர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 21 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Image

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிக்கும் படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்