Published : 04,Oct 2022 07:43 PM

“கொஞ்சம் குழப்பமாக இருக்கிறேன்”.. ஹிருத்திக் ரியாக்‌ஷனும் ’விக்ரம் வேதா’ வசூல் நிலவரமும்!!

Vikram-Vedha-box-office-collection-Day-4-Hrithik-Roshan-and-Saif-Ali-Khan-starrer-sees-45--drop-in-collections-on-first-Monday

'விக்ரம் வேதா' படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் சினிமா வர்த்தக நிபுணர்கள்.

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இந்தியிலும் இயக்கியுள்ளார்கள். ஹிருத்திக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழிலில் எடுக்கப்பட்ட விக்ரம் வேதாவை அப்படியே 99 சதவீதம் மாறாமல் சீன் பை சீன் என்று சொல்லும் அளவிற்கு ரிமேக் செய்துள்ளார்கள். இந்தி படத்திற்காக கொஞ்சம் செலவு அதிகம் செய்து சண்டைக் காட்சிகளை செய்திருந்தார்கள். மேலும் சில சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெளியான விக்ரம் வேதாவை காட்டிலும் சிறப்பாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது. தமிழ் ஆடியன்ஸ் பலரும் இந்தியை விட தமிழில் வெளியானதே சிறப்பாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இருப்பினும், ஹிருத்திக் ரோஷனின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள். மிரட்டலான நடிப்பை அவர் கொடுத்திருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலை படம் கொடுத்து வந்தது.

இந்நிலையில், படத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) முதல் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 'விக்ரம் வேதா' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வசூலானது, நான்காம் நாளான நேற்று ரூ.5.75 கோடி வசூலித்தது. இது முந்தைய 3 நாளோடு ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைவான வசூல் ஆகும். திங்கட்கிழமை வசூலில் சற்றே சரிவு இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இருப்பினும் எதிர்பார்த்ததை விட வசூல் சரிவை சந்தித்தது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 'விக்ரம் வேதா' படம் ஒரு வார முடிவில் ரூ.60 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

'விக்ரம் வேதா' படத்திற்கு இவ்வளவு குறைவான வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் சினிமா வர்த்தக நிபுணர்கள். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் திரையரங்குகள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. நாளை புதன்கிழமை படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹிருத்திக் ரோஷனின் முந்தைய படங்களான 'வார்' மற்றும் 'பேங் பேங்' இரண்டும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 'விக்ரம் வேதா' படம் வசூலில் தடுமாறி வருவது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யூடியூபர் ஆஷிஷ் சஞ்சலானியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் தோன்றிய ஹிருத்திக் ரோஷன் 'விக்ரம் வேதா' படம் குறித்துப் பேசினார். படத்திற்கு வரும் ரியாக்ஷன்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஹிருத்திக் கூறுகையில், “நான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறேன். அதேசமயம் படத்தைக் கண்டு நான் மிகவும் திருப்தி அடைகிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் அதை வேடிக்கையாக செய்தோம், நான் நிறைய கற்றுக்கொண்டேன். படத்தை முழுமையாக முடித்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலகம் நிறைய விஷயங்களைச் சொல்கிறது, அவைகளில் பெரும்பாலும் நல்லதும் இருக்கிறது. நான் அதை மெதுவாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

image

ஒவ்வொரு படமும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு சூப்பர் ஹீரோ படமாகவோ, என்னுடைய 'வார்' அல்லது 'பேங் பேங்' படம் மாதிரியாகவோ கூட இருக்கலாம். நாம் எப்போதும் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை; பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். நான் நட்சத்திர அந்தஸ்த்தை ஒரு பொறுப்பாகப் பார்க்கிறேன்; அதை நான் ஆடம்பரமாகப் பார்க்கவில்லை'' என்று கூறினார்.

இதையும் படிக்க: தீபாவளி வரை 'பொன்னியின் செல்வன்' தானா? - புதுப்படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா?!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்