Published : 20,Sep 2017 04:29 PM

இரட்டை குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை

suicide-in-coimbatore

மகன்களைக் கொண்டுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காடம்பாடி பகுதியில் தங்கி ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வந்த வீரபத்ரன், மனைவி பாண்டிராணியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மனைவி தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்துவிட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்