[X] Close

ஆசிரியரின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு

teacher-attacks-to-student

ஆசிரியரின் கிரிக்கெட் மட்டையால் அடிப்பட்ட மாணவன் உயிரிழந்தான்.


Advertisement

நாமக்கல் அருகே விட்டம்பாளையத்தில் அரசுப்பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுடன் ஆசிரியர் குப்புசாமி கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்பொழுது சற்றும் எதிர்பாராத நிலையில் கிரிக்கெட் மட்டை நழுவிச்சென்று சித்தபூண்டியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் விஸ்வேஸ்வரனை தாக்கியது. அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 2 நாட்களாக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. மாணவன் கோமா நிலையில் இருந்து வந்தான். எவ்வளவு முயன்றும் சிகிச்சை பயனளிக்காமல் இன்று காலை விஸ்வேஸ்வரன் உயிரிழந்தான்.

அதனையடுத்து, உடலை வாங்க மறுப்பு தெரிவித்து மாணவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ஆசிரியர் குப்புசாமியை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.‌ இருப்பினும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அதுவரை உடலை வாங்க முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாணவன் உயிரிழந்த நிலையில் ஆசிரியர் குப்புசாமி கைது செய்யப்பட்டார்.


Advertisement

 

 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close