Published : 03,Oct 2022 06:55 PM

வசூலை குவித்த திரைப்படத்தை சீன அரசு நீக்கியதா? - பின்னணி என்ன?

Hit-Chinese-film-disappears-from-cinemas--streaming-platforms

பாக்ஸ் ஆபிஸிலும், திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு சீனத் திரைப்படம் எந்த ஒரு தெளிவான விளக்கமும் கொடுக்கப்படாமல் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற வாழ்க்கையில் உள்ள சிரமங்களை நேர்த்தியாகச் சித்தரித்த ரிட்டர்ன் டு டஸ்ட் (Return to Dust ) என்ற சீன திரைப்படம் வெளியாகி இரண்டே மாதங்களில் 100 மில்லியன் யுவான் ($14 மில்லியன்) வசூலித்தது. இந்த வருடம் பிப்ரவரியில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ரிட்டர்ன் டு டஸ்ட் படத்தின் கதைக்களம் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றியது என்றாலும் கூட அப்படம் பேசிய கருத்துகள் தேசியவாத கருத்துக்களுக்கு எதிராக இருந்தன. சீனாவின் மோசமான முகத்தை காட்டுகிறது என தி கார்டியன் பத்திரிக்கை விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வேற சில ஊடகங்களும் இதே போன்ற விமர்சனத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. பின்னர், எந்த ஸ்ட்ரீமிங் தளத்திலும் இது எங்கும் காணப்படவில்லை.

image

இதைப்பற்றி படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியது,’ படத்தைத் தடை செய்ததற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் படம் திரையிடப்படும் ‘’என நம்பிக்கை தெரிவித்துள்ளன.

திரையிடத் தயாராக உள்ள படத்தைத் தணிக்கை செய்யும் போது, அந்த படத்தின் உள்ளடக்கத்தையே தணிக்கை செய்யப்பட்ட வரலாறு எல்லாம் சீனத் திரையுலகில் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் வெளியான Despicable Me படத்தின் ஐந்தாவது பாகம், The Rise of Gru போன்ற திரைப்படங்கள், அவற்றின் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றிய பிறகே சீனாவில் வெளியிட அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்