[X] Close

நடிகர் சதீஷ் - ஆர்.ஜே. பாலாஜியின் ட்விட்டர் அடிதடி!

Balaji-fight-with-sathish

ட்விட்டரில் ஆர்.ஜே. பாலாஜிக்கும் காமெடி நடிகர் சதிஷூம் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

ரேடியோவில் ஆர்.ஜே.வாக இருந்து சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் பாலாஜி. மேடை நாடகத்தில் இருந்து சினிமவுக்கு வந்தவர் சதீஷ். இருவரும் காமெடி நடிகர்களாக தற்பொழுது வலம் வருகிறார்கள். இந்நிலையில் பாலாஜியிடம் உங்களுக்குப் பிடித்த காமெடியன் யார் என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு சதீஷ்தான் எனக்கு பிடித்த காமெடியன் என்றுவிட்டு சத்தியமாக நம்புங்க பாஸ் என குத்தலாக பதில் சொல்லியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி.

இதற்கும் பதில் கொடுக்க வந்த சதீஷ் ஹாஹாஹா.. ப்ரோ ஜல்லிக்கட்டு விஷயத்தில் கடைசி நாள் அன்று நீங்கள் போட்ட வீடியோ காமெடியைவிடவா? என்று பதிலிட்டார். அதற்கு மறுபடியும் பதிலளித்த பாலாஜி லொல்... செம பஞ்ச்! நல்ல காமெடி. இதுல பாதியையாவது படத்துல பண்ணீங்கன்னா நல்லா இருக்கும் தோழா என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சு அப்படியே சர்ச்சையாக உருமாறி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close