Published : 28,Sep 2022 04:26 PM

பிரேக்கப்பில் இருந்து மீள வேலையை விடுவதுதான் நல்லதா? - விவாதப் பொருளான பெண்ணின் பதிவு!

Heartbroken-woman-asks-for-time-off-work

காதல் அல்லது திருமண உறவில் மனமுறிவு (heart breakup) ஏற்படுவது பொதுவாக நிகழ்பவையாக இருந்தாலும், அந்த பிரிவில் இருந்து சம்மந்தப்பட்டவர்கள் மீண்டு வருவது என்பதே பெரிய போராகத் தான் இருக்கும்.

அந்த துன்பமான மனநிலை கடினமான நேரத்தையே முன்னிறுத்தும். மன முறிவுக்கு பின் அவர்களின் மனநிலையே மாறும். சோகமாகவே உணர்வார்கள், வேலையை செய்யக் கூட விரும்பாமல் இருப்பார்கள்.

அதன்படி இங்கிலாந்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மம்ஸ்நெட் தளத்தில், தன்னுடைய நீண்ட நாள் துணையை பிரிந்துவிட்டதால் உடல்நிலை சரியில்லை எனக் கூறி வேலைக்கு செல்வது நிறுத்தலாம் என்ற எண்ணம் சரியாகத்தான் இருக்குமா? எனக் கேள்வி எழுப்பி நெட்டிசன்களை விவாதத்திற்கு ஆழ்த்தியிருக்கிறார்.

அந்த பெண்ணின் பதிவில், “நான் ஒரு பயங்கரமான உறவை முறித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. என் மனம் முழுவதுமாக உடைந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் யதார்த்தை உணரும் போது உடனடியாக கண்ணீர் விட்டு கதறுகிறேன்.

எப்போதும் உடல்நிலை சரியில்லாதது போலவே தோன்றுகிறது. இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு இது நடப்பதற்கு முன்பு என் வாழ்க்கை எப்படி இருந்தது என்று திரும்பிப் பார்க்க விரும்புகிறேன். மேலும் எனது வேலை மனதளவில் கடினமாக உள்ளது. இதற்காக வேலையில் இருந்து ஓய்வு எடுக்க முடியுமா? இதற்காக நான் வேலையில் இருந்து விடுபடலாமா? என்னைப் போலவே எல்லாரும் உறவு முறிவுகளுக்கு நேரம் ஒதுக்குகிறார்களா? தயவுசெய்து உதவி செய்யுங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: 

இணையரின் மன அழுத்தத்தை குறைக்க பாடுபடுகிறீர்களா? - காதலர்கள் கவனத்திற்கு!

இந்த பதிவைக் கண்ட மம்ஸ்நெட் பயனர்கள் பலரிடமிருந்தும் கலவையான விமர்சனங்களையும், கருத்துகளையும் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து பெண்ணின் பதிவு நீக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான விமர்சங்கள் என்னவோ தொடர்ந்து விவாதிக்கப்பட்டுதான் வருகிறது என டெய்லி மெயில் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, “உங்கள் மனநிலையை போக்குவதற்கான மருத்துவரை அணுகினீர்களா? ஒருவேளை உங்களுடைய மன அழுத்தத்தை போக்க உங்களுக்கு ஒருவாரம் அல்லது சில வாரங்களுக்கு அவகாசம் கொடுக்கலாம்” ஒரு பயனர் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு அந்த பெண், “மருத்துவரிடம் செல்ல முடியும். ஆனால் வேலைக்குச் சென்றால் அங்குள்ளவர்கள் என்னுடைய மனநிலையை பற்றி என்ன நினைப்பார்கள் என்பது குறித்தே கவலையுறுகிறேன்” என பதில் கூறியிருக்கிறார். அதற்கு “பிரேக்கப்பால் மனம் உடைந்துப் போயிருக்கும் என்னுடைய சக ஊழியரை ஒருபோதும் மதிப்பிட மாட்டேன்” என்றும், “ஏதோ ஒரு சிலர் உங்களை மதிப்பிட்டு பேசலாம். அதனை கடந்து வந்தவர்கள் என எவரும் இல்லைதான். இருப்பினும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது” இப்படியாக பலரும் பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், மிகப்பெரிய வலியில் இருந்து மீண்டு வர உங்களை நீங்களே எதிலாவது ஈடுபடுத்திக் கொண்டால் மட்டும்தான் அந்த மன முறிவில் இருந்து மீண்டு வருவது மன நிலைக்கு நல்லது என்றும் அறிவுறுத்தியிருக்கிறாரகள்.

ALSO READ: 

பிரேக்கப்பால் உடலிலும் மனதிலும் என்னவெல்லாம் மாற்றம் நிகழும் தெரியுமா?

காதல் ரீதியான உறவுகள் ஒத்துவராத நிலையில் அவை கொடுக்கும் மன வலி என்பது சொல்லில் அடக்கிவிட முடியாதுதான். ஆனால் 2010ம் ஆண்டு வெளியான தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வுப்படி, “காதல் வாழ்க்கையில் ஏற்படும் நிராகரிப்பு ஆழ்ந்த இழப்பையும் எதிர்மறையான பாதிப்பையுமே ஏற்படுத்துகிறது. இது மருத்துவ மன அழுத்தத்தைத் தூண்டும் மற்றும் தீவிர நிகழ்வுகளில் தற்கொலை அல்லது கொலைக்கு வழிவகுக்கக் கூடும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல, “உடல் வலியைப் போலவே, உணர்ச்சி வேதனையும் மூளையால் பதிவு செய்யப்படுகிறது” என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளது.