Published : 26,Sep 2022 07:22 PM

"சுந்தர் சி பட ஷூட்டிங் என்றாலே ஜாலிதான்" - ‘காஃபி வித் காதல்’ படக்குழுவினர் கலகல பேட்டி!

Sundar-C-Coffee-with-Kadhal-Trailer-and-Audio-release-fuction

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யாதர்ஷினி நடித்துள்ள படம் 'காஃபி வித் காதல்'. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரைசா பேசியதாவது, "இந்தப் படத்தில் நடித்தது ஒரு வேலை மாதிரியே தெரியவில்லை, ஜாலியாக இருந்தது. ஒவ்வொரு காட்சி முடிந்து கட் சொன்னதும், எல்லோரும் பயங்கரமாக சிரிப்போம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பார்ட்டி செய்வது மாதிரியான உணர்வு" என்று தெரிவித்தார்.

அம்ரிதா பேசும்போது, "முதல்நாள் சுந்தர் சி சார் பார்த்து ரொம்ப பயந்தேன். சார் ஸ்ட்ரிக்டா என ஜெயிடம் கூட கேட்டேன். ஏனென்றால் அவ்வளவு பரபரப்பாக இருப்பார். ஆனால் முதல் நாள் முடிந்ததும் அந்த டென்ஷன் போய்விட்டது. மொத்தமாக ஒரு வெகேஷன் போய் வந்தது மாதிரி தான் இருந்தது" என்று குறிப்பிட்டார்.

ஜெய் பேசுகையில் "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் ஒன்லைன் சொல்லும் போது, இது என்னுடைய நிஜ கேரக்டர் மாதிரி இருக்கே எனத் தோன்றியது. ஜீவா உடன் இணைந்து நடிக்கும் ரெண்டாவது படம். ஒரு நடிகரோட சேர்ந்து நடிப்பது போல இருக்காது. அந்த அளவு கம்ஃபோர்ட்டாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

டிடி பேசும்போது "இந்தப் படத்தின் ஷூட்டிங் யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எல்லாரையும் சேர்ப்பது சுந்தர் சார் தான். அந்த மாதிரி கேரக்டர் தான் எனக்கு இந்தப் படத்தில்" என்று கூறினார்.

image

ஜீவா பேசுகையில், "சுந்தர் சாரின் ஷூட் போல ஒரு ஜாலியான இடத்தைப் பார்க்க முடியாது. என்னைக்கு என்ன எடுப்பார்கள் என டென்ஷனாக இருந்தால், சுந்தர் சார் வந்ததுமே ஒன்னும் இல்ல இவ்வளவு தான் என்பது போல சொல்லித் தருவார். அவரை தயாரிப்பாளர்களின் இயக்குநர் என சொல்லலாம். எவ்வளவு பெரிய படம் என்றாலும் 45 நாள்தான். அதற்குள் எடுத்தால் தான் வியாபாரமாகவும் அது லாபத்தைத் தரும், நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு அலுப்பு வராது. படம் முடியும் போது 100 சதவீத சந்தோஷத்துடன் வெளியே வருவோம்" என்று தெரிவித்தார்.

மாளவிகா கூறும்போது "முதல் படமே இவ்வளவு சிறப்பான படம் என்பது மகிழ்ச்சி. தெரியாத ஒரு புது மொழியில் நடிக்கிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் படத்தின் டீம் அந்த டென்ஷனைக் குறைந்துவிட்டது” இவ்வாறு கூறினார்.

ஐஸ்வர்யா தத் பேசும்போது, "படத்தின் கதையைக் கூட சரியாக கேட்கவில்லை. சுந்தர் சி சார் என்றதும் ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தின் ரிலீஸூக்கு ஆவலாக காத்திருக்கிறேன். என் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கு நான் சென்னையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் காட்ட வேண்டும்” என தெரிவித்தார்.

யுவன் சங்கர் ராஜா குறிப்பிடும்போது "வின்னர் படத்தில் இருந்தே சுந்தர் சாருடன் வேலை பார்ப்பது ஒரு ஜாலியான விஷயம். சில பாடல் கம்போஸ் பண்ண லேட் ஆனாலும், எந்த முக சுளிப்பும் இல்லாமல் காத்திருப்பார். கோபப்படவே மாட்டார்” என்று கூறினார்.

image

பேரரசு பேசும்போது "யுவன் மியூசிகில் இதற்கு முன் ‘வல்லவன்’ படத்தில் அம்மாடி ஆத்தாடி பாடல் எழுதினேன். அது பெரிய ஹிட்டானது, இப்போது இந்தப் படத்தில் தியாகி பாய்ஸ் எழுதியிருக்கிறேன். இதுவும் ஹிட்டாகும். சுந்தர் சார் காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை அப்டேட் செய்தி கொள்வார். இயக்குநராக மட்டுமல்ல ஹீரோவாவும் ஜெயித்திருக்கிறார்.”

சினேகன் பேசுகையில் "சுந்தர் சி சார், ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அன்பே சிவம்’, ‘அருணாச்சலம்’ என எல்லா மாதிரி படங்களையும் பண்ணக் கூடியவர். அவர் படத்தில் பாடல் எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அந்தக் குறையை யுவன் போக்கியிருக்கிறார். இந்தப் பாடல் எழுத வேண்டும் என ஒரு இரவு எனக்கு போன் செய்தார் யுவன். மறுநாள் காலை நான் பிக்பாஸ் அல்டிமேட் ஷூட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. வழக்கமாக ஒரு பாடலின் சூழலை இயக்குநர் தான் சொல்வார். ஆனால் இந்தப் பாடல் உடனடியாக வேண்டும் என்பதால் யுவனே எனக்கு சொன்னார். இரவு 11 மணிக்கு ட்யூன் வந்தது, 1 மணிக்கு பாடலை எழுதி அனுப்பிவிட்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்