மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 2 பேர் கைது

மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 2 பேர் கைது
மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 2 பேர் கைது

மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  

மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டின் கார் செட்டில் மீது நேற்று மாலை இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆறு தனிப்படைகள் அனைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த உசேன் மற்றும் நெல்பேட்டை பகுதியை சேர்ந்த சம்சுதீன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவரை தேடி வருகின்றனர். அதே போல் கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய போது மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது உளவு பிரிவு காவலர் துரைமுருகன் என்பவர் மர்ம நபரால் தாக்கப்பட்டார் .

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அடிப்படையில் கொண்டு தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேலூரை சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் மதுரை மாநகரில் சில்லறை முறையில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கிய தெப்பக்குளம் பகுதியில் உள்ள பிரபல பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்தார்.

இதையும் படிக்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இணையவழி மோசடி – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com