Published : 25,Sep 2022 08:27 PM
ஆதாரை காட்டிய பிறகே பந்தியில் அனுமதி.. திருமண விழாவில் விநோதம் - வைரல் வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் வீடியோ ஒன்றில், திருமண விழாவில் விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாதி கதவு மூடப்பட்ட நிலையில், ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு ஒருவர் ஒருவராக உள்ளே செல்கின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பந்திக்கு செல்ல எதற்காக ஆதார் அட்டையை காண்பிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் நெட்டிசன்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
A #viral video from Amroha, #UttarPradesh shows how guests at a wedding were allowed to feast only after showing their #Aadhaar cards pic.twitter.com/PUq9k7e2S2
— News18 (@CNNnews18) September 25, 2022
இதையும் படிக்க: தினமும் 1.30 மணிநேரம் செல்ஃபோனுக்கு பிரியா விடை கொடுக்கும் இந்திய கிராமம்: எங்கு தெரியுமா?