Published : 25,Sep 2022 03:27 PM

கோவை: ஓட்டலில் நடந்த மோதலில் வைர மோதிரம் காணாமல்போனதாக பாதுகாவலர் மீது புகார்!

Coimbatore--Case-filed-against-hotel-guard-for-stealing-diamond-ring

கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்தப் பிரச்சனையில் வைர மோதிரம் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரில், ஓட்டல் காவலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 10 ஆம் தேதி சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆண், பெண் ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓட்டலுக்கு வந்த 4 பேர் நடன நிகழ்ச்சிக்கு செல்ல முயன்றனர். இதனைப் பார்த்த ஓட்டல் பாதுகாவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி தம்பதிகளாக வந்தால் மட்டுமே உள்ளே அனுமதி என தெரிவித்தனர்.

image

அப்போது அவரக்ளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினர் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

image

இதற்கிடையே கணபதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதில், ஓட்டலில் நடைபெற்ற மோதலில் எனது மகனின் வைர மோதிரம் திருடப்பட்டதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வைர மோதிரத்தை திருடியதாக ஓட்டல் பாதுகாவலர் திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த விஷ்ணுபாரதி (24) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்