[X] Close

ஆசிய உள்ளரங்க தடகளம்: தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்

Asian-Indoor-Athletic--Gold-won-by-Lakshmanan

துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடக‌ளப் போட்டியில், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

5-வது ஆசிய உள்ளரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பந்தய இலக்கை 8 நிமிடங்கள் 2.30 நொடிகளில் கடந்து தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கம் வென்றார். சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் (8 நிமிடம் 03.98 வினாடி) வென்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த் லட்சுமணன் ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். இதேபோன்று மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷீனா தங்கப்பதக்கம் வென்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close