Published : 23,Sep 2022 10:52 PM
ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி நடைபயணம்

ஸ்விகி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஊக்கத் தொகை ரத்து, பணி நேரம் மாற்றம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலிருந்து, பெங்களூரில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடை பயணமாக புறப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளர் பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: தொடரும் பிட்புல் தாக்குதல்கள்... கான்பூரில் பசுமாட்டின் வாயை கொடூரமாக காயப்படுத்திய நாய்