Published : 23,Sep 2022 09:32 PM

'1998-களில் இருக்கிறோமோ..?' சச்சின் விளாசிய சிக்ஸரால் நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்!

Sachin-Tendulkar-dances-down-the-track-smashes-six-off-fast-bowler-fans-react

சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 20 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

சாலைப் பாதுகாப்பு டி20 தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி உட்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. அந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

image

இப்போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய சச்சின்  டெண்டுல்கர் 20 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதில் ஒரு பந்தில் சச்சின், கிரீஸூக்கு வெளியே இறங்கி வந்து ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்த நெட்டிசன் ஒருவர், ''நாம் 1998-களில் இருக்கிறோமோ?” என்று ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ‘வீரர்கள் தவறு செய்யும்போது உங்களுக்கு கோபமே வராதா?’ - தோனி சொன்ன 'கூல்' பதில்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்