Published : 23,Sep 2022 07:52 PM

'இந்திய அணியில் பல ஆண்டுகளாக இருக்கும் அந்த பலவீனம்' - கவாஸ்கர் கவலை!

Existed-For-Few-Years-Now-Sunil-Gavaskar-Highlights-India-Problem-In-T20Is

''இந்திய அணி இலக்கை நிர்ணயித்து வெற்றிபெற வேண்டுமென்றால் 16-20 ஓவர்களை நன்றாக வீசியாக வேண்டும்'' என்கிறார் சுனில் கவாஸ்கர்.  

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 208 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய அணியை பொறுத்தவரை தலையாய பிரச்னையாக இருப்பது பந்துவீச்சு மட்டுமே. இந்நிலையில் இந்திய அணியின் பலவீனம் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ''இந்தியாவுக்கு வந்துள்ள பிரச்னை புதிதல்ல; கடந்த சில வருடங்களாகவே இது இருந்து வருகிறது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லையென்றால் ஆட்டம் கடினம் என நினைக்கிறார்கள். பும்ரா இருந்தால் எவ்வளவு குறைவான ஸ்கோரையும் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவர் இல்லையென்றால் 200 ரன்களையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

image

பும்ரா கண்டிப்பாக தேவை என்ற சூழல் இருந்தபோதும், அவர் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ கூறுகிறது. எனவே இதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பும்ரா இல்லையென்றால் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. எப்படிபட்ட ஸ்கோரையும் கட்டுப்படுத்துவோம் என நினைக்க வேண்டும். இந்திய அணி இலக்கை நிர்ணயித்து ஜெயிக்க வேண்டுமென்றால் 16-20 ஓவர்களை நன்றாக வீசியாக வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் காண்கிறது இந்தியா.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20: தொடரை தக்கவைக்குமா இந்திய அணி?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்