Published : 23,Sep 2022 09:00 AM

அட்லீயின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்ட விஜய், ஷாரூக்கான் - வைரலாகும் புகைப்படம்

Shah-Rukh-Khan-Vijay-and-Atlee-in-one-epic-frame-Unseen-pic-from-Jawan-director-s-birthday-bash

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் கோலிவுட் தளபதி விஜய்யுடன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் அட்லீ பிறந்தநாள் விழா கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் ‘எந்திரன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநரான இருந்த அட்லீ, பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றிப்படங்களை கொடுத்து அடுத்தடுத்து கொடுத்து முன்னணி இயக்குநராக மாறினார். இதையடுத்து அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடந்தது. இந்தப் படம் அடுத்தவருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாவதாக டைட்டில் டீசருடன் வெளியான வீடியோவில் அறிவிக்கப்பட்டது.

image

இயக்குநர் அட்லீ மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவருக்குமே பாலிவுட்டில் இது அறிமுகப்படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. மும்பை, ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது 36-வது பிறந்தநாளை இயக்குநர் அட்லீ கடந்த 21-ம் தேதி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் கோலிவுட் தளபதி விஜய் ஆகிய இருவருமே கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இயக்குநர் அட்லீ, விஜய்யை `என்னோட அண்ணன், என்னோட தளபதி’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்