Published : 20,Sep 2022 08:09 AM

அன்லிமிடெட் ஃபுட்-க்காக தெலுங்கில் பேசி ஊழியர்களை கரெக்ட் செய்த அமெரிக்கர்.. வைரல் வீடியோ!

american-youtuber-speaks-telugu-and-gets-unlimited-free-food-at-new-jersey

திணிப்புகள் ஏதும் இல்லாமல் விருப்பப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுத் தெரிந்துக்கொண்டால் சமயங்களில் உதவிக்கரமாகவே இருக்கும். முன் பின் தெரியாத இடங்களில் தெரியாதவர்களிடம் வேண்டியவை கேட்டு பெறுவது போன்ற சொற்ப விஷயங்களுக்கு கூட உறுதுணையாக இருந்துவிடும்.

அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியாவின் தென் மாநில மொழிகளில் ஒன்றான தெலுங்கில் பேசி அசத்திய நிகழ்வு குறித்த வீடியோ அவரது யூடியூப் பக்கத்திலேயே பகிரப்பட்டு வைரலாகியிறுக்கிறது.

அதன்படி ஷாவ்மா என்ற யூடியூபர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்திற்கு சென்று தெலுங்கில் பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அவரது இந்த முயற்சி கடைசியில் அவருக்கு இலவசமாக அதே ரெஸ்டாரன்ட்டில் உணவும் சாப்பிட்டிருக்கிறார்.

பரிவார் டிலைட்ஸ் என்ற உணவகத்திற்கு சென்ற ஷாவ்மா அங்கு பிச்சிப் போட்ட பரோட்டாவை போல தெலுங்கில் பேசி இரானி டீ குடிக்க கேட்டிருக்கிறார். கொஞ்சிக் கொஞ்சி ஷாவ்மா தெலுங்கில் பேசியதைக் கேட்ட அந்த ரெஸ்டாரென்ட் ஊழியர் அவரது மொழித் திறனை பாராட்டும் வகையில் இலவமாக உணவும் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல, மற்றுமொரு தெலுங்கு வாசம் வீசும் ரெஸ்ட்டாரென்ட்டிற்கு சென்று தெலுங்கில் பேசி அசத்த அங்கு சுவையான பிரியாணியும் டீயும் தானாக கிடைத்திருக்கிறது. இப்படியாக நியூ ஜெர்சியில் இருந்து பல இந்திய ஓட்டல்களுக்கு சென்று ஜாலியாக தெலுங்கில் பேசி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அப்போது ஒரு ஓட்டலில் தெலுங்கு எப்படி கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்க, அதற்கு ஷாவ்மா, “நான் ஒரு முறை கூட இந்தியாவுக்கு சென்றதே இல்லை. ஆன்லைனில்தான் தெலுங்கு பேச கற்றுக் கொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார். மேலும், தெலுங்கில் பேசியதால் நிறைய ஓட்டலில் ஃப்ரீயாகவே சாப்பிட்டுவிட்டேன். ஆனாலும் தனக்கு உணவு கொடுத்தவர்களுக்கு டிப்ஸ் கொடுத்ததாகவும் ஷாவ்மா அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாவ்மாவின் இந்த தெலுங்கு பேச்சு குறித்த வீடியோ யூடியூபில் 6 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்