Published : 19,Sep 2022 12:40 PM
இங்கிலாந்தில் இந்து - முஸ்லீம்களுக்கிடையே மூண்ட கலவரம் - காரணம் என்ன?

ஆகஸ்ட் 28 அன்று துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து , இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் லெய்செஸ்டர் நகரில் வசிக்கும் உள்ளூர் இந்து – முஸ்லீம் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வன்முறை வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காவல்துறை அதிகாரிகள் வந்து வன்முறையை கட்டுப்படுத்தி உள்ளனர் மேலும் வன்முறையை தொடராமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், காவல்துறை விடுத்த அறிக்கையில், ’இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
அமைதியை சீர்குலைத்தவர்களின் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது அவர்கள் உட்பட பலர் தேடப்பட்டு வருகிறார்கள். இதே போல் மீண்டும் இந்த இரண்டு குழுக்களும் வன்முறையில் ஈட்டுப்பட்டாலோ அல்லது அரசாங்கத்தின் விதிகளை மீறி நடந்துகொண்டாலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம்." என்று லெய்செஸ்டர் நகரில் வசிக்கும் உள்ளூர் இந்து – முஸ்லீம் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இங்கிலாந்து காவல்துறை. வன்முறை வீடியோக்களை பகிர்ந்த சில இங்கிலாந்து மக்கள், ‘ எங்கள் நாட்டில், இதுபோன்ற அமைதியைச் சீர்குலைக்கும் வன்முறைகளும் பிரச்னைகளும் நடந்தால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Muslims and Hindus clashing again in Leicester, England today.
— Paul B (@pauldbowen) September 17, 2022
Will we see this in the mainstream media tomorrow? I won't hold my breath pic.twitter.com/hheUlXFNw0