[X] Close

திரைப்படமாகிறது இந்திய கிரிக்கெட் நாயகி வாழ்க்கை

Jhulan-Goswami-life-history-movie

இந்திய கிரிக்கெட் நாயகி ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின், தோனி, கோலி உள்ளிட்டோர் பல சாதனைகளை படைத்து உலகளவில் பிரபலமானவர்களாக வலம் வருகின்றனர். இவர்களைப் போன்றே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜூலன் கோஸ்வாமியும் பல சாதனைகளை படைத்தவர். சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கணை என்ற சாதனையையும் படைத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான ஜூலனை, சக்தாஹா எக்ஸ்பிரஸ் என்று சக வீரர்கள் அழைப்பார்கள். 

இந்நிலையில் ஜூலன் வாழ்க்கை வரலாற்றை கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்திற்கும், சக்தாஹா எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. சுசாந்தா தாஸ் என்பவரின் இயக்கத்தில் ஹிந்தியில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் நாடியா என்ற‌ கிராமத்தில் தொடங்கி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஜூலன் விளையாடியது வரை அவரது வாழ்க்கையில் இடம் பெற்ற சுவாரசியமான சம்பவங்கள் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, சச்சின் ஆகியோரை தொடர்ந்து ஜூலன் கோஸ்வாமி குறித்த திரைப்படம் வெளியாக உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close