தூத்துக்குடி: காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!

தூத்துக்குடி: காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!
தூத்துக்குடி: காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் சுவரொட்டிகளை ஓட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த், அனுமதியின்றி சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறி, சுவரொட்டிகளை பறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கோவில்பட்டி நகர பாஜக தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோர் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தைதொடர்ந்து வேறேதும் அசம்பாவிதம் நடக்காமலிருக்க கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com