Published : 18,Sep 2022 07:45 AM

ஷமிக்கு கோவிட் தொற்று உறுதி.! ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து விலக வாய்ப்பு.!

Shami-is-confirmed-to-be-infected-with-Covid--Chance-of-withdrawing-from-Australia-T20-series-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 தொடரில் பங்கேற்ப்பதற்கு முன், முகமது ஷமிக்கு கோவிட் டெஸ்ட்டில் தொற்று உறுதியாகி இருப்பதால தொடரிலிருந்து ஷமி விலக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிகொள்ளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

image

டி20 உலககோப்பைக்கான ஆடும் அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாததை அடுத்து அணி தேர்வின் மேல் பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்த மூத்த பந்துவீச்சாளர் ஷமியை விட்டுவிட்டு இளம் பந்துவீச்சாளர்களை அணிக்குள் எடுத்ததற்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் ஆடும் 11ல் இடம்பெற்றதையடுத்து இந்த டி20 போட்டிகளில் ஷமி சிறப்பாக செயல்பட்டால் உலககோப்பைக்கான இந்திய அணி தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு ஷமி டி20 உலககோப்பைக்கான முதன்மை அணியில் இடம்பிடிப்பார் என நம்பப்பட்டது.

image

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடருக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட் டெஸ்ட்டில் ஷமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷமிக்கு பதிலாக அணியில் உமேஷ் யாதவ் இடம்பிடிப்பார் என தெரிகிறது.

image

முகமது ஷமி இந்த டி20 தொடருக்கு முன் 2021ல் நடந்த டி20 உலககோப்பையில் தான் விளையாடியிருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது தான் டி20 அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் கடந்த ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி, குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்