Published : 17,Sep 2022 01:50 PM

”வயது முதிர்ந்த பெண்தான் சரியாக இருக்கிறார்கள்” 43 ஆண்டுகளில் 53 பேரை மணந்த சவுதி முதியவர்

63-year-old-saudi-man-marries-53-times-in-a-43-years

திருமண வாழ்க்கை திருப்திகரமானதாக அமையவேண்டும் என பலரும் படாதபாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். என்ன முட்டி மோதினாலும் திருமண வாழ்வில் அந்த நிலையான நிம்மதி கிடைத்துவிடாதா என எண்ணாதவர்களே இருக்க முடியாது. இருப்பினும் எவரையுமே எந்த விஷயத்திலுமே திருப்திப்படுத்திவிட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவரை இந்த மனக்குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் சவுதியைச் சேர்ந்த 53 திருமணங்களை செய்துக் கொண்ட 63 வயது முதியவருக்கு தற்போதுதான் தெளிவு பிறந்திருக்கிறது போலும்.

அபு அப்துல்லா. இந்த நூற்றாண்டின் பலதார மனம் புரிந்தவர் என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் சவுதி அரேபியாவின் முன்னணி தொழிலதிபராக இருக்கிறார். திருமண வாழ்வில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கண்டறியும் நோக்கில் இத்தனை திருமணங்களை செய்துக்கொண்டதாக அபு அப்துல்லா சவுதியின் MBC தொலைக்காட்சிக்கு பேட்டியாகவே அளித்திருக்கிறார்.

image

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “என்னுடைய 20வது வயதில் முதல் முறையாக எனக்கு திருமணம் நடந்தது. என்னுடைய முதல் மனைவி என்னைவிட 6 வயது இளயவள். முதல் மனைவி மூலம் எனக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மூன்று ஆண்டுகள் வரை நிறைவான வாழ்க்கையைதான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன்.

ஆனால் என்னுடைய 23வது வயதில் எங்கள் மண வாழ்க்கையில் பிரச்னைகள் எழத் தொடங்கியது. ஆகையால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பி, அதனை என் மனைவியிடமும் கூறிவிட்டேன். பிறகு, இரண்டாவதாக திருமணம் செய்தும் எனக்கு எந்த பலனும் கிட்டவில்லை. ஆகையால் 3, 4, 5 என 43 ஆண்டுகளில்  53 பெண்களை திருமணம் செய்திருக்கிறேன்.

என்னுடைய எல்லா மனைவியரிடத்திலும் நியாயமாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். என்னுடைய இத்தனை திருமண வாழ்வில் குறுகிய திருமணம் ஒரே ஒரு இரவு மட்டுமே நீடித்திருந்தது. தொழிலதிபராக இருப்பதால் அடிக்கடி வெளிநாடு சென்று வருவேன். சவுதி பெண்களை தாண்டி வெளிநாட்டு பெண்களையும் மணந்திருக்கிறேன்.

ஒரு பெண்ணுடன்தான் தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த வேண்டும் என அனைத்து ஆண்களும் விரும்புவார்கள். ஆனால் இளம்பெண்களை காட்டிலும், வயதில் மூத்த பெண்களிடம்தான் அந்த நிலையான தன்மை கிடைக்கிறது. இதுவரை திருமணம் செய்த 52 பேரையும் விவாகரத்து செய்துவிட்டேன். தற்போது 53வதாக ஒருவரை மணந்திருக்கிறேன். இனி எவரையும் திருமணம் செய்வதாக இல்லை.” என்று 63 வயதான அப்துல்லா கூறியிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்