Published : 16,Sep 2022 06:29 PM
காரைக்கால்: செல்போன் கடையில் மொபைல் திருடிய புகாரில் தாய்-மகள் கைது.!

செல்போன் கடையில் செல்போன் வாங்குவது போல் நடித்து செல்போனை திருடிய தாய், மகள் காரைக்காலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை உள்ளது. அங்கு வந்த இரண்டு பெண்கள் செல்போன் வாங்குவது போல் பல்வேறு மொபைல்களை பார்த்துள்ளனர். அப்போது ஊழியர்கள் கவனிக்காத பொழுது விலை உயர்ந்த செல்போனை ஒரு பெண் எடுத்து மற்றொரு பெண்ணிடம் கொடுத்து திருடுவதை சிசிடிவியில் அந்த கடையின் மேலாளர் பார்த்துள்ளார்.
இதனையடுத்து இரண்டு பெண்களும் கையும் களவுமாக பிடித்த ஊழியர்கள் அவர்களை காரைக்கால் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட தாய், மகள் நாகப்பட்டினம் சேர்ந்த பழனியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை ( 36 ) என்பது தெரியவந்தது. இதனை எடுத்து செல்போன் கடையில் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்கால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் செல்போன் கடையில் ஏமாற்றி தாய், மகள் இருவரும் செல்போன் திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.