வாட்ஸ்அப் குழுவிற்குள் இனி வாக்கெடுப்பு நடத்தலாம்! வருகிறது மாஸ் அப்டேட்!

வாட்ஸ்அப் குழுவிற்குள் இனி வாக்கெடுப்பு நடத்தலாம்! வருகிறது மாஸ் அப்டேட்!
வாட்ஸ்அப் குழுவிற்குள் இனி வாக்கெடுப்பு நடத்தலாம்! வருகிறது மாஸ் அப்டேட்!

வாட்ஸ்அப் குழுவிற்குள் POLL எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியாகவுள்ளது. டெலிகிராம் போன்ற செயலிகளில் ஏற்கனவே இருக்கும் POLL எனும் வாக்கெடுப்பு நடத்தும் அம்சத்தை பயனர்களுக்கு விரைவில் வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலும் இந்த அப்டேட் முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கும் என்றும் பின்னர் ஆண்ட்ராய்ட், மற்றும் டெஸ்க் டாப் வெர்சனுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே உருவாக்க முடியும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது என்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் அந்த குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com